இவ்வாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட தொலைபேசி சேவையை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மொபிடெல், ஏர்டெல், ஹட்ச் மற்றும் இலங்கை டெலிகொம், லங்கா பெல் ஆகியவை தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டலில் டயலொக் அக்யாடா வின் முன்னெடுப்புடன் கைகோர்த்துள்ளன.
கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எந்த தொலைபேசி நெட்வொர்க்கில் இருந்தும் 1377 ஐ அழைப்பதன் மூலம் இந்த வாய்ப்பை வழங்க முடியும்.
இந்த சேவைக்கு தொலைபேசி கட்டணம் ஏதும் அறவிடப்பட மாட்டாது. சிங்களம் அல்லது தமிழில் கலந்துரையாடலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.teachmore lk
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய எந்தவொரு பாடம் தொடர்பான கேள்விகளுக்கும் பதில்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
teachmore.lk
மிகவும் சிறப்பான திட்டம்.மாணவர்கள் பயன்பெறலாம்.நன்றி