சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறக்கப்பட உள்ளது.
க.பொ.த உயர்தர உயிரியல் பிரிவில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் பல்கலைக்கழக அனுமதிவாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாண்டு 75 மாணவர்கள் மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். எதிர்காலத்தில் வயம்ப பல்கலைக்கழகம், மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்ததாகவும் மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவற்றில் 150 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு வசதியளிப்பதற்காக இரத்தினபுரி வைத்தியசாலை, போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும். இதற்குரிய ஏற்பாடுகளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதலைமையில் இடம்பெறவுள்ளது என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது