உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவர்களிடம் விருத்தியாக்கப்பட வேண்டிய மிருது நிலைத் திறன்கள்

க. சுவர்ணராஜா

உபபீடாதிபதி (நிதி நிர்வாகம்)

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி

அறிமுகம்
உலகமயமாக்கல் மாற்றங்களுடன் போட்டியிட்டு முன்னேறுவதற்கும், தகவல் மையப் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பவும், அதன் ஊடாக வலுவான நாட்டினைக் கட்டியெழுப்பதல், உயர் ஆற்றல்களை கொண்ட, அறிவுமிக்க பிரசைகளை உருவாக்க வேண்டியது கல்வியின் கடமையாக மாறியுள்ளது.

மனித மூலதனத்தினை நாட்டின் தொலைநோக்கிற்கு ஏற்ப கட்டியெழுப்பவும், மனித சமூகத்தினை உயர் நிலைக்கு இட்டுச் செல்லவும், ஆற்றல் மிகு கற்றல் – கற்பித்தல் அவசியமாகும். தரமற்ற மனித மூதனத்தின் ஊடாக புதுமைகளையும், முன்னேற்ற நோக்கிலான சிந்தனைகளையும் உருவாக்கிவிட முடியாது. தரமான
மனித மூலதனம் உருவாக்கப்படுவது தரமான
கல்விச்செயன்முறை மூலமே ஆகும்.

நன்கு கவனமாக திட்டமிடப்பட்ட வடிவமைக்கப்பட்ட கல்வி முறைமையானது மனித மூலதனத்தை சிறப்பாக விருத்தி செய்வதற்கான அடிப்படையாக அமையும். ஆசிரியர் கல்வியை வழங்கும் நிறுவனங்கள், சிறப்பான மூலதனத்தினை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பினை நல்க வேண்டியுள்ளது.அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும்
தேவைப்படும் அத்தியாவசிய ஆற்றல்களை ஆசிரியர் களுக்கு வழங்குவதன் ஊடாக நாடெங்கிலும் சிறப்பான கற்றல் – கற்பித்தல் செயன்முறையை உருவாக்கி  அதன் ஊடாக புதிய நூற்றாண்டிற்கு தேவைப்படும் மனித மூலதனத்தினை உருவாக்க முடியும்.

சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ற ஆற்றல்மிகு மனிதர்களை கல்வி செயன்முறை உருவாக்குவதற்கு ஆற்றல் மிகு ஆசிரியர்களின் தேவைப்பாடு ஒரு மறுக்கமுடியாத நிபந்தனையாகும். ஆசிரியரின் கல்வியை வழங்கும் நிறுவனங்கள்
காலத்திற்கு காலம் சமூகம் எதிர்பார்க்கும் திறன்களை ஆற்றல்களை, அறிவை வழங்கக்கூடிய ஆசிரியர்களை உருவாக்க வேண்டுமானால் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தமது கலைத்திட்டத்தின் சமூகம் எதிர்பார்க்கும் விடயங்களை பயிற்றுவித்தல் வேண்டும்.

ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் கலைத்திட்டச் செயன்முறையானது அவ்வப்போது எழுகின்ற மாற்றங்களை உள்வாங்கி அதற்கேற்ப புதுப்புது ஆசிரியர்களுக்கு
நிலைமாற்றம் செய்யும் போதே சமூகத்தின் தேவைகளை
நிறைவு செய்வதற்கான கற்றல் – கற்பித்தல் சாத்தியமாகும்.
சுய ஆற்றல், சுயஊக்குவிப்பு, சுயமதிப்பு, சுய வெளிப்பாடு, சுயமதிப்பீடு என்ற வகையில் தற்போது சமூக மாற்றத்திற்கான ஒரு திறனாக மிருதுவான திறன்கள் பற்றி பேசப்படுகின்றது. இந்த மிருதுவான திறன்களை தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்ற உள்ளகப்பயில்வு மாணவ ஆசிரியர்களிடையே கட்டியெழுப்புதல் தொடர்பாகவே இக்கட்டுரை ஆராய்கின்றது.

கட்டுறுவுப்பயில்வு மாணவ ஆசிரியர்கள் என்போர் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இரண்டு வருட கல்விசார் கோட்பாடுகளைக் கற்று இறுதிப் பரீட்சைக்கு
தோற்றி ஒரு வருடம் பாடசாலைகளில் உள்ளகப் பயில்வை மேற்கொள்பவார்கள்

கட்டுறுப்பயில்வுக்கான குறிக்கோள்களும் நோக்கங்களும்.

கட்டுறுப் பயில்விக்கான குறிக்கோள்களும் நோக்கங்களும். பின்வருமாறு அமைகின்றது.

 • பயிற்சி பெறும் ஆசிரியர்கள் கற்பித்தற் திறன்களை விருத்தி செய்தல்.
 • மாணாக்கர்களின் உடல் சார்ந்த, உளம் சார்ந்த  மனவெழுச்சி சார்ந்த இயல்புகளை அறிந்து கொள்ளல்.
 • மாணாக்கர்களின் உளமட்டங்களுக்கமையக் கற்பித்தலை ஒழுங்குபடுத்தும் ஆற்றலைப் பெறுதல்.
 • மாணாக்கர்களின் வேறுபட்ட குணநலன்கள், தேவைகள், விருப்புக்கள், இரசனைகள் பற்றிய விளக்கத்தை மேலும் விருத்தி செய்துகொள்ளல்.
 • பாடஉள்ளடக்கம் தொடர்பான தேர்ச்சியை எய்துதல்.
 • கற்பித்தல் திறைமைகளுக்குப் பொருந்தும் வண்ணம் பல்வேறு கற்பித்தல் நுட்பமுறைகளைப் பிரயோகிக்கும் ஆற்றலையும் கற்பித்தலுக்குகந்த பௌதீகச் சூழலைஅமைத்துக் கொள்ளும் ஆற்றலையும் பெறுதல்.
 • தேவைகளுக்கேற்பப் பொருத்தமான கற்பித்தல் உபகரணங்களைத் தொளிவுசெய்தல், தயாரித்தல் என்பன தொடர்பான ஆற்றலையும் அவற்றை பயன்படுத்தும் வல்லமையையும் பெறுதல்.
 • கற்பித்தல் நோக்கங்களைத் தீர்மானித்த பின்னர் பாடங்களை திட்டமிடும் ஆற்றலையும் செயற்படுத்தக் கூடிய பாடக் குறிப்புக்களை தயாரிக்கும் வல்லமையையும் விருத்தி செய்துகொள்ளல்.
 • கற்பித்தலின் போது ஆக்கத் திறனிலும் புதியன பிறப்பித்தலிலும் ஆர்வம் காட்டல்.
 • கற்பித்தலில் இடைவிடாது தொடர்ந்து கற்றலிலும் ஆர்வம் காட்டுதல்.
 • மாணாக்கர்களை மதிப்பீடு செய்யும் பொழுது பயன்படுத்தப்டும் அளவுகோள்களை விருத்தி செய்துகொள்ளல்.
 • குறிக்கப்பட்ட நேரத்திலேயே கற்பித்தலில் ஈடுபட்டு  அப் பணி தொடர்பான வேலை நெறிமுறைகளை பழகிக் கொள்ளல்.
 • பாடசாலையில் வெவ்வேறு வகுப்புக்களில் கற்பித்தல் தவிர, காலைப் பாடசாலைக் கூட்டம், அன்றாட சமய வழிபாடுகள், பாடசாலை இறுதித் தினங்களில் இடம் பெறும் வகுப்புச் செயற்பாடுகள் போன்றவற்றில் விருப்பத்துடன் பங்குபற்றும் பண்பை வளர்த்துக் கொள்ளல்.
 • பாடசாலையில் ஒழுக்காறும் மாணக்கார்டையே குணப் பண்புகளும் இடம் பெறுவதற்கு உகந்த சமூகச் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு உதவுதல்.
 • பாடசாலை முகாமை தொடர்பான வேலைகளில் பங்குபற்றல்
 • பெற்றார், ஆசிரியர் மற்றும் மக்கள் சேவைகள் போன்றவற்றில் பங்குபற்றுதல்.
 • வெளித்தோற்றம், சுய நடத்தைப் பாங்கு என்பவற்றிற்கு ஆசிரிய தர்மத்திற்கு உகந்த விதத்தில் அமைத்துக் கொள்ளல்.
 • முதிர்ச்சி பெற்ற ஆளுமையை விருத்திசெய்து கொள்வதற்கு முயலுதல்.
 • சகல சமூக வகுப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பல்வேறு அறிவுமட்டங்களைக் கொண்ட மாணாக்கர்களையும் சமமாகக் கருதி மனிதத் தன்மையுடனும் கருணையுடனும் நடத்துவதுடன் அவர்களுடைய அடைவை உச்சமட்டத்திற்கு உயர்த்துவதற்கு முயலுதல்.
 • கல்வி முகாமையில் தனக்கென ஒதுக்கப்பட்ட கடமைக் கூறை விளங்கிக் கொண்டுஅதில் ஈடுபடுதல்.  

(தேசிய கல்வியியற் கல்லூரிகளின் கட்டுறுப்பயில்வுக்கான வழிகாட்டற் குறிப்புக்கள் GIZ)

மிருதுவான திறன்கள்

மிருதுவான திறன்கள் என்பது வாழ்நாள் கற்றல் தொடர்பான அக்கறை, ஆர்வம் என்பவற்றை அதிகாித்தல் என்பதிலிருந்து உருவான ஒரு விடயமாகும். மிருதுவான திறன்கள் விருத்தியானது, சுய வாண்மை விருத்தியுடன் தொடர்புடைய ஒரு விடயமாகும்.

கற்றல் ஊடாகவும் தொழில் பயிற்சி ஊடாகவும் மிருதுவான திறன்களை கட்டியெழுப்பி தனது வாழ் தொழிலில் இலகுவாக வெற்றி பெற முடியும்.

ஒருவரின் அறிகை, சமூக வாழ்க்கை, மனவெழுச்சி அறிவாற்றல் என்பவற்றுடன் மிருதுவான திறன்கள், கோட்பாடு கட்டியெழுப்பட்டுள்ளது.

தலைமைத்துவக் கோட்பாடுகளான கட்டுப்பாட்டு கோட்பாடு, சார்பு கோட்பாடு, இலக்கு கோட்பாடு என்பவற்றின் செல்வாக்கினைப் பெற்றதாக மிருதுவான திறன்கள் கோட்பாடு அமைகின்றது. இருந்த போதிலும் மிருதுவான திறன்கள் தொடHபான ஆய்வுகள் மேலும் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது.

ஒருவர் ஒரு சமூகச் சூழலில் மற்றொருவருடன் அல்லது மற்றவர்களுடன் கட்டியெழுப்பும் தொடர்புகள் மற்றும் நடத்தைகள் எவ்வாறு அமைந்தால், அத்தொடர்பு அல்லது அந்நடத்தை வெற்றிகரமாக அமையும் என்பதை கூறுவதாக மிருதுவான திறன்கள் அமைகின்றன
(Gibb, Stephen International Journal of Lifelong Education, v33 n4 p455-471 2014)

வரைவிலக்கணம்
மிருதுவான திறன்கள் என்பது ஒருவரின் மனவெழுச்சி அறிவாற்றலுடன் இணைந்ததாகும். ஒருவரின் அளுமை பண்புகள், சமூக ஆர்வங்கள், தொடர்பாடல், மொழி, சொந்த பழக்க வழக்கங்கள், நட்புரிமையுடன் குறிக்கோளை அடைய துணை நிற்றல், மற்றவர்களுடான தொடர்புகளின் தளறாதிருக்கும் குணவியல்புகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும் Wikipedia defines soft
skills

ஒருவாின் தொழில் அறநெறிகள், அவரின் மனப்பாங்கு, அவாின் தொடர்பாடல் திறன்கள், மனவெழுச்சி அறிவாற்றல், மற்றும் அவரது தனித்த பண்புகளைச் சுட்டிக் காட்டுவதாகும். Mind Tools defines soft skills

வாழ் தொழில் வெற்றிக்கான கட்டங்கள்
கடின திறன்கள் (Hard Skills)
கணிதம், கணக்கீடு, பௌதீகம்
உயிரியல், இராசயனவியல், புள்ளிவிபரவியல்
நிதியியல், நிகழ்ச்சியமைப்பு

மக்கள் திறன்கள் (People skills)
தொடர்பாடல் திறன்கள், தலைமைத்துவ திறன்கள்,
அணியாக இயங்கும் திறன்கள், வலையமைப்புத் திறன்கள்,
விரும்பத்தகுதிறன்கள்

சுய முகாமைத்துவ திறன்கள் (Self Management skills)
விழிப்புணர்வு, மனவெழுச்சிக்கட்டுப்பாடு, தன்னம்பிக்கை
பொறுமை, தாக்குப் பிடித்தல்.

வேலை அறநெறிகள் (work Attitude)
நேர்மை, வகைக்கூறல், கற்றலுக்கான விருப்பம்.
சுந்தர்ப்பங்களை பயன்படுத்தல்

வாண்மைத்துவம். (Professionalism)
பொருத்தமான தோற்றம், உரிய நேரத்திற்கு கருமமாற்றல்,
மதுபோதை தவிர்ப்பு, பணிவு

கடினமான திறன்களுக்கும் மிருதுவான திறன்களுக்குமிடையிலான வேறுபாடுகள்.

கடினமான திறன்களுக்கும் மிருதுவான திறன்களுக்கு மிடையே மூன்று பிரதான வேறுபாடுகள் காணப்படுகின்றன்.

1. கடினமான திறன்கள் ஒருவரின் நுண்ணறிவோடு தொடர்புடையது.(இடது மூளையின் செயற்பாடுடன் தொடர்புடையது) மிருதுவான திறன்கள் மனவெழுச்சி
அறிவாற்றலுடன் தொடர்புடையது. (வலது
மூளையின் செயற்பாடுகளுடன் தொடர்புடையது.)

2. கடினமான திறன்கள் நிலையான விதிகளுடன் தொடர்புடையது அதாவது எழுத்தில் எழுதப்பட்டு பின்பற்ற வேண்டிய விதிகளை குறித்து நிற்பது.மிருதுவான திறன்கள் ஒரு நிறுவனத்தின கலாசாரம்
அங்கு பணியாற்றும் பணியாளர்கள் போன்ற தன்மைகளுக்கு ஏற்ப மாற்றக்கூடிய விதிகளாகும்.

3. கடினமான திறன்கள் பாடசாலையில் கற்கப்படுகின்ற நூல்களுடாக, கற்கை நெறிகளுடாக கற்கப்படும் திறன்களாகும். ஆனால் அநேகமான மிருதுவான திறன்கள் பாடசாலைக்கு வெளியே வாழ்க்கைச் சம்பவங்களுடாகவும் வேலைச்சூழல் ஊடாகவும், முயன்று தவறுதல் ஊடாக மிருதுவான திறன்கள்
கற்றுக் கொள்ளப்படுகின்றன.

கட்டுறுப்பயில்வு மாணவ ஆசிரியர்கள் மாணவர்களின்
கற்றல் தொடர்பாக மிருதுவான திறன்கள்

 1. மாணவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப கலைத் திட்டத்தில் உள்ள அம்சங்களை கற்கத் தூண்டுதல்.
 2. கற்றலுக்கு வேண்டிய உண்மையான புதுமையான ஆர்வமூட்டக்கூடிய சூழலை ஒழுங்கமைத்துக் கொடுத்தல்.
 3. சகல மாணவர்களும் கற்றலுக்கான உயர் இலக்குகளை கொண்டிருக்க ஊக்குவித்தல்.
 4. மாணவர்கள் தனி த்துவமான கற்றலை மேற்கொள்வதற்கான முன்மாதிரியாக திகழுதல்.
 5. மாணவர்கள் தமக்கு பொருத்தமான கற்றல் பாணிகளை தெரிவு செய்து கற்பதற்கு வழிகாட்டுதல்.
 6. மாணவர்களின் தனித்துவத்தை மதித்து கற்பித்தல்.
 7. சிறப்பான தொடர்பாடலுக்கு முன்மாதிரியாக செயற்படல்.
 8. மாணவர் முன்னிலையில் தௌிவாகவும் வினைத் திறனாகவும் உரையாடுதல்.
 9. ஆசிரியரின் இலக்குகளை மாணவர்கள் அடைந்து கொள்ளக்கூடிய வகையில் மாணவர்கள் மீது செல்வாக்குச் செலுத்துதல்.
 10. பொருத்தமான மொழி நடை, உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம், தௌிவு, இலகுவான மொழி நடை என்பவற்றை பயன்படுத்தி மாணவர்களுக்கு விளக்குதல்.
 11. உறுப்பெழுத்துக்களில் பொருத்தமான அளவில் மாணவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய அளவில் எழுதுதல்.
 12. கற்பித்தலுக்காக மின்னஞ்சல், கணனியில் பொறித்தல், சொல்முறையாக்கம், மென்பொருட்களை பயன்படுத்தல், சமூக வலைதளங்களை பயன்படுத்துதல்.
 13. கற்பித்தலுக்காக பொருத்தமாக பல்லூடகங்களை பயன்படுத்துதல்.
 14. மாணவர்களை குழுவாக அணியாக இயக்குதல்.
 15. வகுப்பறை முகாமைத்துவத்திற்கான பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுதல்.
 16. மாணவர்களின் ஒழுக்கப்பிரச்சினைகளை ஒத்துணர்வுடன் நோக்குதல்.
 17. நேரமுகாமைத்துவத்தை கடைப்பிடித்தல்.
 18. முன்னுரிமை அடிப்படையில் பாடங்களை திட்டமிட்டு கற்பித்தல்.
 19. ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் முடிவு திகதியை நிர்ணயித்து செயற்படல்.
 20. மாணவரின் பங்குபற்றுதல்களுடன் இணைபாடவிதான செயற்பாடுகளை திட்டமிட்டு நிறைவேற்றுதல்.
 21. கற்றல் கற்பித்தலின் போது நெகிழ்ச்சியாக தொழிற்படுதல்.
 22. மாணவர்கள் சலிப்படையும், விரக்தி அடையும் சந்தர்ப்பங்களில் அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்தல்.
 23. புதிய புதிய நுட்பங்களை கையான்டு கற்பித்தல் மாணவர்களிடையே மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணருதல்.
 24. பிரச்சினையை இனங்காணுதலும் பிரச்சிணைகளை தீர்தலும்.
 25. முரண்பாடுகளை நேர் நிலையில் தீர்வு செய்தல்.
 26. பக்கச்சார்பற்ற முறையில் நெறிப்படுத்தல்களை மேற்கொள்ளுதல். என்பனவாகும்.-

நன்றி  – ஆயதனம்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!