ஆசிரியர்களுக்கான கற்பித்தல் மாதிரிகள் 

Teachmore


ஆசிரியர்களுக்கான கற்பித்தல் மாதிரிகள் 
பேராசிரியர் மா. செல்வராஜா

கல்வியியற்துறை

கிழக்குப் பல்கலைக்கழகம்


01. அறிமுகம்

மாதிரி என்னும் பதமானது எமது தினசரி வாழ்க்கையில் பல்வேறு பொருள்களைத் தருகின்றது. நாம் தாஜ்மகாலின் மாதிரியைப் பார்க்கின்றோம். அது உண்மையான தாஜ்மகாலின் உருவத்தைச் சரியாகத் தருகின்றது. இதன் காரணமாகவே மாதிரிகள் வகுப்பறைச் சூழலில் வினைத்திறன் வாய்ந்தகற்பித்தல் சாதனமாகத் திகழ்கின்றன. நடத்தை மேம்பாட்டில் ஒரு மாணவனிடம் நன்னடத்தை, நல்ல மனப்பாங்கு, நாட்டம், மற்றும் பிற ஆளுமைப் பண்புகளை உருவாக்குவதற்கு நாம் மாதிரி அல்லது மாதிரியாக்கல் எனும் செயற்பாட்டில் ஓர் இலட்சிய நடத்தை உருவை வழங்குகின்றோம்.

ஓர் ஆசிரியர் அல்லது தலைவர், அல்லது ஒரு சிறந்த வீரன் போன்றோர் ஒரு பிள்ளைக்கு ஒரு மாதிரியாக அமைந்து அந்த ஆளுமையின் நடத்தைப் பண்புகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தொழிற்படுகின்றார்கள். இன்னொரு வழியில் மாதிரி என்னும் பதமானது கலைஞர்கள், கட்டிட நிருமாணக் கலைஞர்கள்,மற்றும் பொறியியலாளர்கள், அணைக்கட்டுகளின் மாதிரிகள், செயற்திட்டங்கள் (Projects), இயந்திரங்களை அமைத்தல் அல்லது பொருத்தல் மூலம் பணிகளைச் செய்வதற்குத் தயாராகும் நிலையையும், பணிகளை அத்திட்டத்தின்படி செய்வதற்கு உதவியாக அமைவதையும் காணலாம்.
இப்பல்வேறு விளக்கங்கள் அல்லது வரைவிலக்கணங்கள் கற்பித்தல் மாதிரிகளை விளங்குவதற்கு உதவியாகின்றன. ஆராய்ச்சியாளர்கள் சிலர் தரும் வரைவிலக்கணங்கள் சிலவற்றைக் கீழேகாணலாம்.
JOYCE and WELL (1972:2)

 • கற்பித்தல் மாதிரிகள் போதனை செய்யும் திட்டங்களாகும். குறிப்பிட்ட சூழலில் மாணவன் தொழிற்படுவதால் அவனது நடத்தையில் குறிப்பான மாற்றங்கள் ஏற்படுகின்றன. 
 • கற்பித்தல் மாதிரி என்பது ஒரு திட்டம் அது கலைத் திட்டத்தை அல்லது ஒரு பாடநெறியை செம்மைப்படுத்திப் போதிப்பதற்கான ஆசிரியர் வழிகாட்டியாகும் (1972:3).
 • கற்பித்தல் மாதிரியொன்று கல்விச் செயற்பாடுகளையும் சூழலையும் கொண்ட வழிகாட்டியாகும். அது கற்பித்தல், கற்றல் என்பனவற்றால் அடையக்கூடிய குறிக்கோள்களைச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றது (1978:2).

02. கற்பித்தல் மாதிரிகளின் பண்புகள் (Characteristics of Teaching Models)
கற்றல் கற்பித்தல் வெற்றிக்கான திட்டங்களே மாதிரிகள். கற்பித்தல் பொது நுட்பங்களினின்றும் வேறானதாயிருப்பதுடன் சிறப்பான குறிக்கோள்களை அடைவதற்கான திட்டங்களுமாகும்.கற்றல் கற்பிப்பதற்கான சூழலை ஏற்படுத்த உதவுகின்றன.மாணவனிடம் விரும்பக்கூடிய நடத்தையை ஏற்படுத்த உதவுகின்றன.ஒரு பொறியியலாளருக்குப் பாலம் அமைப்பதற்கு மிகவும் திருத்தமாக உதவும் மாதிரி போன்று ஆசிரியரது பணிக்கு ஒரு திட்டமாக அமைகின்றது.
ஆசிரியரது சக்தி, நேரம், முயற்சி என்பனவறைச் சேமிக்க உதவுவதுடன் மாணவனுக்கு கற்றல் சாதனங்களைச் சிக்கனமாக உபயோகிக்கவும் வழிகாட்டுகின்றது.

03. கற்பித்தல் மாதிரிகளின் வகைகள்(Types of Teaching Models)

 1. தரவு நிரற்படுத்தல் மாதிரிகள் (Information Processing Models): சூழலில் பெறப்படும் தூண்டியைமக்கள் கையாளும் வழிகள், தரவுகளை ஒழுங்கமைத்தல், பிரச்சினைகளை உணருதல், எண்ணக்கருக்களை உருவாக்குதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை ஏற்படுத்தல், சொல்சார்ந்த, சொல்சாரா அடையாளங்களைப் பயன்படுத்தல் என்பனவற்றைக் குறிப்பிடும்.
 2. சமூக இடைத்தாக்க மாதிரிகள் (Social Interaction Models):பண்புசார்ந்த குறிக்கோள்களை அடைவதைக் கருத்திற் கொண்டது. இது Affective Domain வகையைச் சேர்ந்தது.
 3. தனியாள் அபிவிருத்தி மாதிரிகள் (Personal Development Models)  சமூக அபிவிருத்திக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மாதிரிகளும் மனப்பாங்கு அல்லது பண்புகள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டவை கற்பித்தல் குறிக்கோள்களை அடைவதைக் கவனத்தில் எடுப்பவை.
 4. நடத்தை மாற்று மாதிரிகள் (Behavior Modification Models):   இம்மாதிரிகளின் குடும்பமானது நடத்தை மாற்றுக் கோட்பாடுகளுடன தொடர்புள்ளவை.

04. வேறுசிலகற்பித்தல் மாதிரிகளையும் குறிப்பிடலாம்

 • கல்வி உளவியலாளர் டேவிட் ஒஸ்பெல் (David Ausbel) என்பவரின் உயர்தர ஒழுங்கமைப்பு மாதிரி.
 • சச்மனின் விசாரணை பயிற்சி மாதிரியானது (suchman’s inquiry training model) J.. றிச்சாட் சச்மனால் விருத்தியாக்கப்பட்டது.
 • புளுமின் நிபுணதது;வ கற்றல் மாதிரியானது (Mastery Learning) மிகவும் பயனுள்ள மாதிரியாக வகுப்பறைகளிலும், பயிற்சி நெறிகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. போதனையின் விளைவை மேம்படுத்துவதில் பயன் உள்ள முறையாக இது உள்ளது.
 • புறூணரின் எண்ணக்கரு அடைவு மாதிரி (Bruner’s Concept Attainment Model) இது புறூணாராலும் சகாக்களாலும் விருத்தியாக்கப்பட்டது.
 • ஜீன் பியாஜேயின் அறிகை விருத்தி மாதிரி (Jean Piaget’s Cognitive Development Model).
 • சமூக விசாரணை மாதிரியானது (Social Inquiry Model) பென்ஜமின் கொக்ஸ், பைரன் மிசியல்ஸ் (Byron Missials) என்பவர்களால் விருத்தியாக்கப்பட்டது. சமூகக் கல்வி கற்பித்தல் மற்றும் ஆய்வுகள் எழுவினாக்களுக்கு இது மிகவும் பயன்உள்ளது.
 • ஆயவு கூடமுறை மாதிரி (Laboratory Method Model) Bethel மற்றும் Maine ஆகியோர் ஐக்கிய அமெரிக்க தேசிய பயிற்சி ஆய்வு கூடத்தில் பணியாற்றிய வேளை விருத்தியாக்கப்பட்டது. கல்வியின் சமூகக் குறிக்கோளை அடைவதற்குப் பொருத்தமான சமூகச் சூழலும் சமூக இடையீடாட்டமும் இதன் செயற்பாட்டுக்கு அவசியம்.
 • சினெற்ரிக்ஸ் மாதிரி (Synetics Model) 
 • வில்லியம் J.J Gordon (1968) என்பவரால் உருவாக்கப்பட்டது. கைத்தொழில் நிறுவனங்களில் ஆக்கக் குழுக்களை (Creativity Groups) விருத்தியாக்க ஆரம்பத்தில் இம்முறை பயன்படுத்தப்பட்டது.
 • நிபந்தனைப்பாட்டுக் கற்பித்தல் மாதிரி (Operant Conditioning Teaching Model)
 • இதுவும் நடத்தை மாதிரிக்; குடும்பத்தைச் சேர்ந்தது.  பிரசித்தி பெற்ற உளவியலாளரான B.F.ஸ்கின்னரால் விருத்தியாக்கப்பட்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

05. நிறைவாக இரண்டு விடயங்களைச் சற்று விரிவாக நோக்கி இதனைப் பூர்த்தியாக்கலாம். அவை

(i) போல் காரணங்காண் மாதிரி (Paul Reasoning Model)(ii) சோக்கிரதீஸ் கருத்தரங்கு மாதிரி (Socratic Seminar Model)
போல் காரணங்காண் மாதிரிஇம்மாதிரி காரணங் காணுதலின் நான்கு அம்சங்களின் மீது கட்டியெழுப்பப்படுகின்றது. காரணங் காணலின்மூலங்கள், காரணங்காண் ஆற்றல், காரணங்காண் மனதின் பண்புகள் (Traits) காரணங் காணலுக்கான தரங்கள் (Standards) என்பன அவை. ஓர் உள்ளடக்கப் பரப்பினுள் எழு வினாக்கள் அல்லது பிரச்சினைகள் தொடர்பாக காரணங் காண்பதற்கான மூலங்களைக்கருத்திற் கொள்வதற்கு மாணவர்களுக்கு இம்மாதிரி உதவியளிக்கின்றது.இம்மாதிரியானது எட்டு மூலங்களில் கவனத்தைக் குவிக்கினறது. இது வினாவுதல், ஒப்படை எழுதுல், ஆய்வுவேலை என்பனவற்றையும் இணைத்துக் கொள்ளுகின்றது.
(அ) தாக்கம்/இலக்கு: காரணம் காணும்போது சில நோக்கங்களை அடைவதற்காக, சில விருப்பங்களைத் திருப்தி செய்வதற்காக அல்லது சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் செய்கின்றோம். இலக்கு யதார்த்தமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் காரணங் காணுதல்அடையக்கூடியதாக இருக்கும்.
(ஆ) பிரச்சினை யொன்றைத் தீர்க்கக் கூடியதாயிருத்தல்: இந்த முயற்சியில் குறைந்தது ஒரு பிரச்சினையாவது தீர்க்கக்கூடியதாயிருத்தல் வேண்டும். இதற்கான பிரச்சினை அல்லது வினா தொடர்பாக நாம் தெளிவாக இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான தீர்வை நாம் காண்பது சுலபமாயிராது.
(இ) காரணங்காணலில் எண்ணக்கரு ரீதியான பண்புகள்:அனைத்துக் காரணங்காணல்களும் சிலகருத்துக்கள் அல்லது எண்ணகருக்களை உபயோகிக்கின்றன. எண்ணக்கருக்கள் அல்லது கருத்துக்கள் என்பனவற்றில் தவறுகளிருந்தால் அவை பிரச்சpனைகளுக்குவழிவகுக்கும்.
(<) காரணங்காணுதலில் ஆய்வுப் பண்பு: காரணங்களை நாம் காணும் போது சில தோற்றப்பாடுகள் பற்றிக் காரணங்காணலில் ஈடுபடுகின்றோம். நமது காரணங்காணலின் அடிப்படையாக இருக்கக்கூடிய அனுபவங்கள், தரவுகள், சான்றுகள் என்பனவற்றிலுள்ள குறைபாடுகள் பிரச்சினையின் மூலங்களாக அமையும்.
(உ) எடுகோள்கள் (Assumptions):இது காரணங்காணும் செயல்முறைக்கு ஆரம்பப் புள்ளியாகும். எல்லா காரணங்காண் முயற்சிகளும் எங்கோ ஒர் இடத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும். இதிலுள்ள தவறுகளும் பிரச்சினைக்கு இட்டுச் செல்லும்.
(C) அனுமானம் (Inference): காரணங்காணுதலின் படிமுறைகள் அனுமானம் என அழைக்கப்படும். பெரும்பாலும் அவ்வாறு… இதன் காரணமாக என்ற சொற்பிரயோகங்கள் அங்கு இடம்பெறும். அனுமானத்தில் உள்ள தவறுகள்பிரச்சினைக்கு மூலமாக அமையும்.
(v) தொடர்புகளும் விளைவுகளும் (Implication and Consequences): எல்லாக் காரணங்காணல்களும் ஏதோ ஓரிடத்தில் தொடங்கி ஓரிடத்தை நோக்கிச் செல்லுகின்றன. எந்தக் காரணங்காணலும் நிலையானது அல்லதுதடைப்பட்டு நிற்பதன்று. அது அனுமானங்களின் தொடர்ச்சியாகும். 
சோக்கிரதீஸ் கருத்தரங்கு மாதிரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட விடயம் (Text) தொடர்பில் இம்மாதிரி மாணவர்களை ஈடுபடுத்துகின்றது. மாணவர்கள் தெரிவு செய்ததும், வாசித்து அறிந்து உரையாடக் கூடியதுமான உரைப் பகுதியை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட உரையாடல் இடம்பெறும். தெரிவு செய்யப்பட்ட சிக்கலான கருத்து நிறைந்த பகுதி இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் சேர்ந்து உரையாடுவதன்மூலம் கருத்துக்களைத் தர்க்க ரீதியாக உரையாடிப் பிறரது அபிப்பிராயங்களையும் கருத்திற் கொள்வர்.
சேர்ந்து வாசித்து உரையாடுவதன் மூலம் மாணவர் தமது விளக்கங்களை ஆழமாக்கிக் கொள்வர்.
சோக்கிரதீஸ் கருத்தரங்கு மாதிரி சில அத்தியாவசிய மூலங்கள் உள.
1) வாசிப்புப் பகுதியின் சிறப்பான தெரிவு(Substantive Reading Selection) சோக்கிரதீஸ் கருத்தரங்குக்கான வாசிப்புப் பகுதி எவ்வுள்ளடக்கப் பரப்பிதிருந்தும் தெரிவு செய்யப்படலாம். தெரிவுசெய்யப்படும் பகுதி கருத்துச் செறிவு, எழுவினா, விழுமியங்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாக மாணவர் வினாவெழுப்பக் கூடியதாகவும், தமது சொந்தக் கருத்துக்களை உரையாடலுக்கு உட்படுத்துவதாகவுமிருக்கவேண்டும். வாசிப்புக்காகத் தெரிவு செய்யப்படும் பகுதியானது மாணவர்களால் ஏற்கனவே வாசித்து விளங்கப்பட்டதாகவும் கருத்தரங்கில் பங்குகொள்ள ஆயத்தமாக வருவதாகவுருமிக்க வேண்டும்.
2) முக்கிய வினா (Important Question):திறந்த கலந்துரையாடல் முக்கிய வினாவால் வழிநடத்தப்படல் வேண்டும். இவ்வினாவுக்கு சரியானதோ அல்லது தவறானதோ விடை இராது. இவ்வினா மாணவர்களது சிந்தனை, அவர்கள் குறிப்பிட்ட வாசிப்புப் பகுதியை நோக்கும் விதம், மதிப்பீடு செய்யும் ஆற்றல், வரைவிலக்கணப்படுத்தும் திறன், எழுவினாக்களைத் தெளிவாக்கும் திறன் என்பனவற்றை வாசிப்புப் பகுதியின் மீது ஏற்படுத்துவதாக விருக்கும்.
3) செயல் சார்ந்த பங்கு கொள்வோர் (Active Participants):பங்குபற்றுவோர் தமது பொறுப்புக்களைக் கருத்தரங்கின் தரத்தை நோக்காகக் கொண்டு பகிர்ந்து கொள்வர். கருத்தரங்கிற்கான உரையாடல் ஆயத்தம் ஒவ்வொரு பங்குபற்றுனரதும் பொறுப்பாகும். ஒவ்வொருவரும்தம்மைப் பார்த்துக் கொள்வதற்காக இருக்கும் முறை வட்ட வடிவானதாக இருக்கும். ஆயத்தப்படுத்திவராத மாணவரகள் தம்மை உள்வட்டத்தினின்றும் விடுவித்துக் கொள்ளவேண்டும். அத்தகையவர்கள் வெளிவட்டத்திலிருந்து கொண்டு உள்வட்டத்துக் கலந்துரையாடலைஅவதானித்துக் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். கருத்தரங்கு நடைபெறும் போதுபங்கு பற்றுவோர் கவனமாகக் கேட்டல், கருத்துக்களைப் பரிமாறல், வினாவெழுப்பல், விடையளித்தல் தமது கருத்துக்களுக்குஉதவியாக ஆதாரங்களைத்தேடல் என்பனவற்றில் ஈடுபடுவர். இம்மாதிரியில் விடயத்தை வாசிப்பதிலும் சிந்தித்தல் கேட்டல் உரையாடல் என்பனவற்றிலும் மிகுந்த கவனம் குவிக்கப்படல் அவசியம். சிறந்த விளக்கத்துடன் உரையாடல் முடிக்கப்படல் வேண்டும். 
சோக்கிரதீஸ் கருத்தரங்கு மாதிரியின் முக்கிய அம்சம் ஒரு தலைப்பிலான திறந்ததும், சுதந்திரமானதுமான உரையாடலாகும். ஆசிரியர் பொதுவாக ஒரு வளப்படுத்துனராக விளங்குவார். அவர் மாணவர் உரையாடலுக்கு உடன்பாடனதோ அல்லது எதிர் மறையானதோகருத்துகளை வழங்கமாட்டார். ஆசிரியரது முக்கிய பணி சிறந்த சிந்தனையடிப்படையான, திறந்த வினாவை உரையாடலை ஏற்படுத்துவதற்கு வழங்குவதாகும்.
நிறைவாக, இத்தகைய மாதிரிகள் மாணவர்களது சிந்தனைக்கும் கற்றலுக்கும் உதவியளிக்கின்றன. எந்தச் சூழ்நிலையிலும் இவை சிறந்த பணிக்கு உதவியளிக்கின்றன. வகுப்பறையின் எல்லா மாணவர்களும் இம்மாதிரிகளின் பிரயோகத்தினால் பயனடைவர். மீத் திற மாணவர்களும்இம்மாதிரிகளில் உயரியஉள்ளடக்கத்திற்கும், ஆழமான அனுபவங்களுக்கும் விமர்சனரீதியான பிரச்சினை தீர்த்தலுக்கும் சந்தர்ப்பங்களைக் காண்பார்கள். ஒரு மாதிரியானது மாணவர்களுக்கு வசதியாக அமையும் போது தமது சிந்தனையை ஆழமாக்குவதுடன் வேறு உள்ளடக்கப் பரப்புகளிலும் பழக்கப்பட்ட கருவியாக உபயோகிப்பார்கள்.

-ஆயதனம் 2016

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!