புகைத்தல் மற்றும் மது பாவனையின் காரணமாக நாளாந்தம் நாட்டில் 50 தொடக்கம் 60 நபர்கள் உயிரிழக்கின்றனர் என்று மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையத்தின் மனிதவள அபிவிருத்தி மற்றும் நிர்வாக பிரிவின் பணிப்பாளர் சம்பத் செரம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் புகைத்தல் மற்றும் மது பாவனைக்காக 99 கோடி ரூபா பணத்தை பொது மக்கள் செலவிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மத்திய நிலையம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் நாட்டில் சிகரட் போன்றவற்றின் பாவனை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பட்டார். நாட்டில் மக்கள் தொகையில் 15 சதவீதமானோர் புகைத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
18 சதவீதமானோர் மது பாவனையில் ஈடுபட்டிருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகைத்தல் மற்றும் மதுபானத்திற்காக செலிவிடப்படும் பணம் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கே சென்றடைகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அததி)