ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர் கைது
கொள்ளுப்பிட்டி அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்த ஜா-அல பிரதேசவாசிகள் இருவரை கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
35 மற்றும் 37 வயதுடைய இவர்கள் துடெல்ல மற்றும் மாஎலிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
நேற்று (02) கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 9ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபரும் நேற்று தெரணியகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.