சீதுவ, ஆண்டியம்பலம பிரதேச பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க சீதுவ ரத்தொழுகம மற்றும் ஆண்டியம்பலம முதலான பிரதேசங்களில் 45 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சீதவ பொதுச் சுகாதார அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அவர்களின் அதிகமானோர் கட்டுநாயக ஆடைத் தொழில்சாலை ஊழியர்களும் அவர்களின் உறவினர்களுமாவர்.