அடுத்த மே மாதம் க.பொ.த 2020 சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
மார்ச் முதல் ஏப்ரல் வரை மாணவர்களுக்கு பயிற்சி பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்படும் நோக்கத்தோடு இந்த முடிவு பெறப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
இதற்கிடையில், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மார்ச் 27 முதல் தொடங்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டத்தின் கீழ், மதிப்பீடு மார்ச் 27 முதல் ஏப்ரல் 05 வரை நடைபெறும்.
இரண்டாம் கட்ட மதிப்பீடு இரண்டாம் கட்ட மதிப்பீடு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி மே 05 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.