ஜூலை 6 ஆம் திகதி முதல் தொழிநுட்பக் கல்லூரிகள், தொழில்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சிக் கல்லூரி என்பன மீண்டும் திறப்பதற்கு தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது.
தொழிநுட்பக் கல்லூரிகள் 39 இல் சுமார் 100000 மாணவர்களுக்கும் அதிகமானோர் பயிற்சி பெறுவதாகவும் அவர்களுக்கான சுகாதார பாதுகாப்புக் கொண்ட அடிப்படையில் தொழில் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
அதே நேரம் சினிமாகக் கொட்டகைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதிக்குமாறு கலாசார அமைச்சு, சுகாதார அமைச்சிடம் அனுமதி கேட்டுள்ளது.