குழந்தையின் மொழி அறிவு, விழுமியம் ஆரம்பிக்கும் இடம் குடும்பமே -சி.அருள்நேசன்

Teachmore

பண்டைக் காலத்தில் குடும்பங்களே கல்வி நிலையங்களாக செயற்பட்டு வந்தன. வீடு பள்ளிக்கூடமாகவும் பெற்றோர் ஆசிரியராகவும் இருந்தனர்.பாடசாலைகள் என்னும் நிறுவனங்கள் கல்வியைப் பொறுப்பேற்றுக் கொண்டன. ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். இன்று ஆசிரியர்களும் பாடசாலைகளும் கல்விப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் குடும்பத்திற்கு நிறையப் பங்குண்டு.இளமையில் ஏற்படுகின்றஅறிவுப் பயிற்சி,கலாசாரப் பயிற்சி,ஒழுக்கம் என்பன இன்றும் குடும்பத்தில்தான் நடக்கின்றன. கல்வியறிவும்,கல்விப் பண்பாடும் உள்ள பெற்றோரைக் கொண்ட குடும்பத்திலிருந்து வருகின்ற பாடசாலைச் சிறுவர்கள் கல்வி கற்பதிலே மிக்க ஆர்வமுள்ளவர்களாக இருப்பதைக் காண்கின்றோம். பொருளாதாரம் கல்விக்கு மிக முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கக் கூடிய வலு பொருளாதாரத்திற்குண்டு. முன்பள்ளிகளில் கற்க வருகின்ற குழந்தைகளில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் வலுவுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். முன்பள்ளிகள் இலவசமாகக் கல்வியை வழங்குவதில்லை.நுண்ணறிவுடைய மாணவர்களும் தாழ்வுமனப்பான்மை கொண்டு கல்வியிலே பின்னடைவதைக் காண்கின்றோம். ஆகவேதான் குழந்தைகள் கல்வியிலே பின்னடைவதைக் காண்கின்றோம். ஆகவேதான் குழந்தைகள் கல்வியிலேமுன்னேறுகின்ற வேகம் குடும்ப நிலையில் தங்கியுள்ளதென்றால் மிகையாகாது. குடும்பக் கலாசாரத்தையும் சமூகக் கலாசாரத்தையும் பண்புள்ள குழந்தையையும் தோற்றுவிப்பது குடும்பக் கலாசாரமேயாகும். கற்றறிவுள்குடும்பங்கள் முன்பள்ளியின் தேவையையும்,அவசியத்தையும் உணர்ந்துகொள்கின்றன.குழந்தையினுடைய மொழியறிவு தொடங்குவது குடும்பத்திலாகும். தாய்மொழியைப் புகட்டுவது தாய்,தந்தை மற்றும் சுற்றத்தார்களாவர். குடும்பத்தின் மொழியறிவுக்கு ஏற்ப குழந்தையின் மொழியறிவும் அமையும். குடும்பத்துடன் காணப்படுகின்ற ஒத்துழைப்பு,புரிந்துணர்வு,பரந்தமனப்பான்மை என்பனவற்றை குழந்தையும் கற்றுக் கொள்கின்றது. பல சமூக நற்பண்புகளுக்கான அத்திவாரம் குடும்பத்திலேதான் இடப்படுகின்றது. இந்தவகையில் நோக்கும் போதுகுடும்ப கலாசார பாரம்பரியமானது பிள்ளை செல்லுகின்ற பாடசாலைகளையும் பாதிக்கின்றது எனலாம்.தாய் தந்தையருக்கிடையில் ஏற்படுகின்ற பூசல்கள் பிள்ளைகளைப் பாதிக்கின்றன. குழந்தையின் ஆளுமையைப் பாதிப்பது குடும்பச் சூழலாகும். புறக்கணித்தல்,ஏற்றுக் கொள்ளல், அசட்டை செய்தல் அளவுக்கதிகமாகப் பாதுகாத்தல், முழு உரிமையளித்தல்,கட்டுப்படுத்தல், பணிந்து போதல் அதிகாரம் செய்தல், ஒன்றிப் போதல், ஒதுக்கிச் செயற்படல் என்பன குடும்பத் தொடர்பிலிருந்தேதான் ஏற்படுகின்றன. குழந்தை குடும்பத்திலிருந்து வெளியேறும் போதுதனதுகலாசாரவிழுமியங்களையும் எடுத்துக் கொண்டே செல்கின்றது.வெளியுலகுக்குச் செல்லும் குழந்தைஅங்கு தன்னுடன் ஒத்துவராத முரண்பட்ட அம்சங்களையும் கண்டு அவற்றுடன் மோதுகின்றது. குறிப்பாக குழந்தை முன்பள்ளிக்குச் செல்லும் போது தனது குடும்பக் கலாசாரத்திற்கு எதிரான பல குழந்தைகளைக் காண நேருகின்றது. அவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அங்குதான் குடும்பத்தில் பெற்றுக் கொண்ட ஒத்துழைப்பு விட்டுக்கொடுப்பு,தலைமை போன்ற நல்ல பண்புகளுக்கேற்ப பழக முற்படும் போது மற்றவர்களிடமிருந்து நல்ல சமிக்ஞைகளைப் பெறுகின்றது. சிலநேரம் எதிர்மாறான சமிக்ஞைகள் கிடைக்கும் போது தனது உள்ளத்தை தளராமல் வைத்துக் கொள்வதற்கு தனது குடும்பத்தில் பெற்ற ஆளுமையுணர்வு உதவி செய்கின்றது. மொன்ரிசோரி அம்மையாரின் கருத்துப்படி முன்பள்ளிகள் குழந்தைகளுக்கு நற்பயிற்சிகளை வழங்க வேண்டுமென்பதாகும்.நவீனகாலத்தில் பண்பாட்டுச் சிதைவுகளும் ஏற்பட்டு வருகின்றன. பட்டணங்களில் வாழ்கின்ற மக்களிடையே இத்தகைய சிதைவுகள் ஏற்படுவதற்குரிய சூழல் அங்கு நிலவுகின்றது. அங்கு நெருக்கமான வீடுகளில் வாழ்தல், பணம் சேகரிப்பதில் மிகுந்த நாட்டம்,அதனால் சுயநலப்போக்கு,பெண்கள் வேலை தேடி உழைத்தல்,விவாகரத்து,முரண்பட்ட பண்பாடுகளைப் பெற்றுள்ள ஆண்களும் பெண்களும் மணந்து குடும்பம் நடத்துவது போன்றன குடும்பச் செல்வாக்கைப் பாதித்துள்ளன.இதனால் குழந்தைகளும் அந்தச் சூழலுக்கு ஏற்றவிதமாக ஒழுகுகின்றனர். கல்விமான்களது முன்பள்ளி சம்பந்தமான கோட்பாடுகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்தக் கலாசாரப் பண்புகள் முன்பள்ளியில் குடியேறிஅங்கும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.முன்பள்ளி ஆசிரியர்கள் இந்தக் குடும்பப் பின்னணியைஅறிந்தவர்களாக,தெரிந்தவர்களாக இருப்பது அவசியமானது. நல்லகுடும்ப வாழ்க்கைக்கு ஈடானதாக எந்தப் பள்ளியையும் கூற முடியாது.பல்வேறு ரகமான குடும்பங்களிலிருந்து குழந்தைகள் முன்பள்ளிக்கு வருகின்றார்கள்.குழந்தைகள் முன்பள்ளிக்கு காலடி எடுத்து வைக்கும் போது தங்களுக்கு பொருத்தமில்லாத கலாசாரத்தை காண நேரும் போது குழந்தைகள் அந்த இடத்திற்குச் செல்வதை வெறுக்கின்றன.சில வாரங்களுக்கு குழந்தைகள் இசைவாக்கம் பெறும் வரை சிரமமானதாக இருக்கும். தொடர்ந்து பயிற்சி பெறும் போது தமக்குரிய நண்பர்களைப் பெற்றுக் கொள்வார்கள்.முன்பள்ளிகள் மாணவர்களின் தனிப்பட்டவளர்ச்சிக்கும் சமூகவளர்ச்சிக்கும் ஏற்ற சூழ்நிலையைஉருவாக்குகின்றன. பள்ளிகளில் ஏற்படும் சூழ்நிலைகள் மாணவர்களின் முழுவளர்ச்சிக்கும் உதவுகின்றன. கலாசார வளர்ச்சிக்கு மேலும் வலுவூட்டி வளர்க்கின்றன.சி. அருள்நேசன்
கிழக்குப் பல்கலைக்கழகம்
நன்றி – தினகரன்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!