கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் டிப்ளோமா ஊடகவியல் கற்கைநெறியானது, டிப்ளோமா தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் கற்கைநெறி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 30ஆம் திகதியாகும்.
ஊடகத்துறையில் பணியாற்றுவோர், ஊடகத்துறையில் அனுபவமுடையோர் மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தந்திர ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகத்துறை சார்ந்தோர் ஆகியோரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஒரு வருட காலத்தைக் கொண்ட இக்கற்கைநெறி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடத்தப்படும் என்பதோடு, பிரதி சனிக்கிழமை தோறும் காலை 9.00 மணியிலிருந்து 1.30 மணி வரை விரிவுரைகள் இடம்பெறும்.
இது தொடர்பான விண்ணப்பப்படிவங்களை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் வெளியீட்டு கிளையிடமிருந்து அல்லது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் பிரிவு இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களை 0112 500431 எனும் தொலைபேசி இலக்கம் வாயிலாகவோ,
இணையத்தளம் வாயிலாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.