தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்காக தொழில் துறை அபிவிருத்திக்கான வேலைத்திட்டம்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை நாட்டின் இளைஞர் சமூகத்தினர் மத்தியில் பிரபல்யம் மற்றும் கவனத்தை ஈர்த்துள்ள துறையாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த துறை தொடர்பில் இளைஞர் யுவதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கி பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தும் 10000 இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி ஒன்றை வழங்குவதற்கும் இவர்கள் வர்த்தக முயற்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பான ஆலோசனையொன்றை பெற்றுக்கொண்டு அதனை மதிப்பீடுசெய்வதுடன் வெற்றிகரமான 3000 விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து அவர்களுக்கு மடி கனணி இணையதள தொடர்பு தேவையான ஏனைய உபகரணங்கள் மற்றும் நிதி வசதி வழங்குவதற்கான திட்டமொன்று தேசிய தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.