ஹட்டன் சிரிபாத கல்லூரியின் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் திக்ஓய நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.பாலகிரிஷ்னன் தெரிவித்துள்ளார்.
கினிகத்ஹேன தனியார் ஆடைத் தொழிற்சாலையில் சேவையில் ஈடுபாடும் ஹட்டன் காமினிபுரயில் வசித்துவரும் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடைய குடம்ப நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே குறித்த பாடசாலையில் கற்கும் அவருடைய மகனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக குறித்த பாடசாலையின் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த மாணவர் கடந்த 12 ஆம் திகதி வரை பாடசாலைக்கு வருகை தந்ததாகவும் தற்போது அந்த வகுப்பு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பாடசாலையில் அதிபர் இரேஷா ஹெட்டியாரச்சி, மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதால் அந்த மாணவரது குழுவில் 11 பேர் அன்றைய தினம் சமூகமளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.