தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எப்போது என்பது தொடர்பான கேள்விகள் அதிகரித்துள்ளன.
ஏற்கனவே திட்டமிடப்பட்டு நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பிற்போடப்பட்டன.
எனினும் பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதனோடு இணைந்ததாக கல்வியில் கல்லூரிகளும் ஆரம்பமாகி பரீட்சைகள் நடைபெறும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
எனினும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் றமழான் காலம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. எனவே, நோன்பு நோற்ற நிலையில் பரீட்சையை முகங்கொடுப்பதில் முஸ்லிம் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வர். அத்தோடு முஸ்லிம்கள் அதிகமாக கற்கும் கல்வியியல் கல்லூரிகள் நோன்பு காலத்தைக் கருத்தில் கொண்டு மூடப்படுவதும் வழமையாகும்.
எனவே, எதிர்வரும் 6 ஆம் திகதி பரீட்சைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்னறன.
எனினும் இப்பரீட்சையை இம்மாதத்திற்குள் நடாத்தி முடிக்காவிட்டால் கல்வியில் கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவர்.
இப்பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு இன்னமும் தீர்மானம் எதனையும் எட்டியிருக்கவில்லை என அறியவருகிறது.
நானள இது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சு வெளியிடக் கூடும் என கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.