2018 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பத்தை நிரப்ப முன்னர், வர்த்தமானியை முழுமையாக வாசிக்குமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் படி பாடநெறி இலக்கம் 49 மற்றும் 50 வர்த்தகம் மற்றும் கணக்கீட்டுக் கல்வி (சிங்களம் மற்றும் தமிழ்) பாடநெறிக்காக 2018 ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தரம்) பரீட்சையின் கணக்கியல், வணிகக் கல்வி மற்றும் பொருளியல் ஆகிய மூன்று பாடங்ளிலும் சித்தயடைந்த விண்ணப்பதாரிளுக் உரிய மொழியில் விண்ணப்பிக்க முடியும்.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு
2020ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தொடரறா (Online) முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், அவற்றைத் திருத்திக் கொள்வதற்கு 26.09.2020 ஆம் திகதி தொடக்கம் 30.09.2020 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்படும். அது தொடர்பான அறிவுறித்தல் பின்னர் வழங்கப்படும்
புதிதாக விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது