ஆண்டு 05 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சை ஆகியன தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவிய போது, அவர் முன்னர் அறிவிக்கப்பட்ட தேதிகளில் பரீட்சைகளை நடத்த பரீட்சைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளுக்கான திகதிகளை இதுவரை மாற்றும் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகள் காரணமாக, இலங்கை பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழ்கள் வழங்குவது ஒன்லைனில் மட்டுமே செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏதேனும் தெளவுடுத்தல்கள் இருந்தால், 1911 எனும் இலக்கத்தை அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெறலாம் என்று பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.