தொழில் சார் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அரச நிறைவேற்றுத் தரம் வாய்ந்த உத்தியோகத்தர்கள் புதன்கிழமை (04) அடையாள வேலை நிறுத்தமொன்றில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
சட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு என்பனை அனைத்து நிறேவேற்றுத் தரம் வாய்ந்த அதிகாரிகளுக்கும் வழங்கப்படல், நிர்வாக அதிகாரிகளுக்கான விசேட கொடுப்பனவு வழங்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு மீண்டும் ஓய்வூதிய கொடுப்னவு வழங்கல் முதலான கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிறேவேற்றுத் தரம ்வாய்ந்த அதிகாரிகளின் ஒன்றிணைந்த கமிட்டி அறிவித்துள்ளது.
அனைத்து நாடளாவிய சேவைக்குமுரியவர்கள் மற்றும் சமாந்தர சேவைக்குருியவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்வதகாகவும் நான்காம் திகதி காலையில் அரச நிர்வாக அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கமிட்டியின் செயலாளர் எச்.ஏ.எல். உதயசிரி தெரிவித்துள்ளார்.