திருத்தம்
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவைக்குரிய இலங்கை நீதிமன்ற பதிவாளர் சேவையின் தரம் iii இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை (எழுத்து) – 2018 (2019)
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 2110 ஆம் இலக்க மற்றும் 2019.02.08 ஆந் திகதிய வர்த்தமானப் பத்திரிகையில் மேற்குறிப்பிட்ட போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள்கோரும் அறிவித்தலானது (சிங்களம்/ தமிழ்/ஆங்கிலம்) பிரசுரிக்கப்பட்டுள்ளது.
02. அதில் தமிழ் மொழி மூல அறிவித்தலின் 04 ஆவது பந்தியானது கீழ்வருமாறு திருத்தப்படல் வேண்டும்.
04. ஆட்சேர்ப்பு தகைமைகள் :
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற பதிவாளர் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பதாரிகள் கீழ்வரும் தகைமைகளை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
(அ)
i. இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
ii. விண்ணப்பதாரி சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
iii. அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்படும் சகல விண்ணப்பதாரிகளும் நாட்டின் அனைத்து பாகங்களிலும் கடமையாற்றுவதற்கும்இ பதவிக்குரிய
கடமைகளை நிறைவேற்றுவதற்கும் உடல்இ உள ரீதியான ஆரோக்கியம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
(ஆ) உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்திருத்தல் வேண்டும்.
அல்லது
(இ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்திடமிருந்து
அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பட்டம் வழங்கக்கூடிய நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடமிருந்து பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு சமமான தகைமையாக நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும் தகைமையினை பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு – உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்த திகதி அல்லது பட்டப்படிப்பினை நிறைவூ செய்து பெற்ற பட்டம் வலுவிற்கு வரும் திகதியானது விண்ணப்பப்படிவங்கள் கோரப்படும் இறுதித்திகதிக்கு அல்லது அத்திகதிக்கு முன்னரான திகதியொன்றாக இருத்தல் வேண்டும்.
(ஈ) வயது : விண்ணப்பப்படிவங்களை பொறுப்பேற்கும் இறுதித் திகதிக்கு 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
”அதற்கமைவாக 1997.02.08 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1974.02.08 ஆந் திகதி அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு மாத்திரம் விண்ணப்பிக்க தகைமை உள்ளது.””
(தற்போது பகிரங்க சேவையில், மாகாண அரச சேவையில் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட அரச சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு உச்ச வயதெல்லை பொருந்தாது.)
கவனிக்க. – சகல விண்ணப்பதாரிகளும் பதவிக்குரிய சகல தகைமைகளையூம் வர்த்தமானப் பத்திரிகையின்
திகதியாகிய 2019, பெப்புருவரி 08 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
03. மேற்குறிப்பிட்ட வர்த்தமானப் பத்திரிகையில் இப்பதவியூடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய
நிபந்தனைகள் அனைத்தும் அவ்வாறே வலுவிலிருக்கும்.
எச். எஸ். சோமரத்ன
செயலாளர்
நீதிச்சேவை ஆணைக்குழு.