பரீட்சைத் திணைக்கள ஊழியர்களில் ஒரு குழுவினர் இன்று (31) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினசரி மேலதிக நேர கொடுப்பனவு தாமதப்படுவதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தியதாக அறியவருகிறது.
மேலதிக நேர கொடுப்பனவுக்காக திறைசேரியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்ததும் கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பரீட்சை ஆணையர் நாயகம் சனத் பி திரு பூஜித தெரிவித்துள்ளார்.