பல்கலைக்கழ அனுமதிக்கான கைநூல் வௌியிடப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் முன்னணி புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
முன்னைய ஆண்டுகளை ஒத்த உள்ளீர்ப்பு முறையே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேற்றுடன் இருப்பீர்களாயின் நீங்கள் பின்வரும் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்
1. கைநூலை முடியுமானளவு விரைவாக வாங்கிக் கொள்ளுங்கள். அவை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2. பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமை பெற்ற அனைவரும் இக்கைநூலை ஒரு முறை கட்டாயமாக வாசிப்பது ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும்.
3. இஸட் புள்ளி குறைவாகப் பெற்றுக் கொண்டவர்களும் இக்கைநூலை வாசித்து தமக்கு விண்ணப்பிக்க முடியுமான மிகக் கிட்டிய பாடநெறிகள் தொடர்பாக அவதானம் செலுத்துங்கள்.
4. உடனடியாக விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கு அவசப்படவேண்டாம் . உரிய வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பாடசாலையின் கனணி ஆசிரியர் அல்லது உயர் தரத்துக்குப் பொறுப்பான ஆசிரியர்களின் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
5. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றைத் தௌிவு பெற்றுக்கொள்ளுங்கள்.
6. உங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற அடிப்படையில் கைநூலில் காணப்படும் பாடநெறிகளை அடையாளம் இட்டுக் கொள்ளுங்கள்.
7. முதன்மைப்பட்டியல் ஒன்றைத் தயார் படுத்துங்கள். தெரிவு செய்த பாடநெறிகளுக்கு இலக்கமிட்டு பட்டியல் படுத்துங்கள்.
8. மீண்டும் ஒவ்வொரு பாடநெறிக்குமான ஆகக் குறைந்த தகைமையைப் பெற்றுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
9. மேலதிக தெரிவுப் பரீட்சைகள் கொண்ட பாடநெறிகளை வேறாக பதிவு செய்து கொள்ளுங்கள்.
10. நீங்கள் தயாரித்த பட்டியலை உங்களுக்கு உதவக்கூடிய ஒரு ஆசிரியரிடம் காண்பித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பாடநெறிப் பட்டியலே மிகவும் பிரதானமானது. கடந்த காலங்களில் மாணவர்கள் போதுமான எண்ணிக்கை பாடநெறிகளைத் தெரிவு செய்யவில்லை என்றும் பொருத்தமான பாடநெறி ஒழுங்கில் அவற்றை பட்டியல் படுத்த வில்லை என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிதானமாக, பாடநெறித் தெரிவுப் பட்டியலைத ்தயார் படுத்துங்கள். அதன் பிறகு ஆறுதலான விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கு தயாராகலாம்.
இது தொடர்பான மிக விபரமான வழிகாட்டல் கட்டுரை ஒன்றை எதிர்பாருங்கள்.