இம்முறை பல்கலைக்கழக பிரவேசத்தில் 10000 மேலதிக உள்ளீர்ப்பை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழ மானியங்கள் ஆணைகுழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
கடந்த வருடம் சுமார் 30000 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்பட்டனர். 2019 ஆம் வருடத்தில் புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் 41500 பேர் பல்கலைக்கழகத்திற்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். இதற்கேற்ப கடந்த வருடதோடு ஒப்பிடும் போது வைத்திய பீடத்திற்கு 371 பேரும் பொறியியல் பீடத்திற்கு 405 பேரும் சட்ட பீடத்திற்கு 126 பேரும் உயிரியல் விஞ்ஞான மற்றும் பொறியியல் தொழிநுட்ப பீடத்திற்கு 350 பேர் வீதமும், முகாமைத்துவ பீடத்திற்கு 900 பேரும் கலைப்பீடத்திற்கு 815 பேரும் விவசாய விஞ்ஞான பீடத்திற்கு மற்றும் ஏனைய பீடங்களுக:க 6000 பேரும் மேலதிகமாக உள்ளீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்ட அடிப்படையில் உள்ளீர்ப்பு செய்யும் போது 2011. 2012 வருடத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த பிரிவினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்ட பின்னர், பாடநெறியை மாற்றுதல், பல்கலைக்கழகத்தை மாற்றுதல் உற்பட மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மேற்முறையீட்டை முன்வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை ஈமெயிலில் முறையீடுகளை முன்வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.
முறையீட்டை முன்வைக்க வேண்டிய ஈமெயில் முகவரி : [email protected]
முறையீட்டுக்கான இறுதித் திகதி
23.11.2020
மேன்முறையீடு செய்யும் முறை