பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவே அது தொடர்பாக கவலையடையத் தேவையில்ல என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதுபாப்புப் பிரிவு இது தொடர்பாக தம்மை தெளிவு படுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை நேற்று ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவில் பாரிய வீழ்ச்சியை அசதானிக்க முடிந்தது. எனினும் ஆசிரியர்களின் வரவு திருப்திகரமாக அமைந்திருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மாணவர்கின் வரவில் வீழ்ச்சி காணப்பட்டாலும் அது எதிர்வரும் நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.