பாடசாலை சீருடை வவுசரினால் அரசுக்கு 538.5 மில்லியன் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இது தொடர்பான முறைப்பாட்டை ஜனாதிபதி ஆணைக்குவிடம் முன்வைத்துள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் சீருடை வினியோகித்துவந்தன. எனினும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் சீருடைக்கான வவுசர்களை வினியோகித்திருந்தது.
விஜேதாச ராஜபக்ஷ சில நாட்கள் கல்வி அமைச்சராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.