கொரோனா தொற்றின் பின்னர் புதிய தவணையில் பாடசாலை நேரத்தை இரு மணித்தியாலங்கள் அதிகரித்து, வார இறுதியிலும் பாடசாலையை நடாத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (12) ஊவா மாகாணக் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பண்ராவல வலயக் கல்வி காரியாலயத்தில் இடம்பெற்ற மீள்நோக்குக் கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார்.
இந்த தொற்று நோய் காரணமாக தற்போது வரை 289 மணி நேர பாடசாலை கற்றல் மணித்தியாலங்கள் இழக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இழந்த காலத்தை மீண்டும் பிள்ளைகளுக்கு நாம் வழங்க வேண்டும். பாடசாலை ஆரம்பித்ததும் மேலதிகமாக இரு மணித்தியாலங்கள் கற்பித்து, விடுமுறைகளிலும் கற்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும்:
எதிர்வரும் மாதங்களில் டியுசன் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கும் தீர்மானம் இல்லை. நாம் பாடசாலைக் கல்விக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை நாம் சரியாகக் கூற முடியாது. ஜனாதிபதி செயலகமே அதனைத் தீர்மானிக்கும். அது வரை வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். பாடசாலையை ஆரம்பித்து நடாத்துவதற்கு பொருத்தமான ஒரு திட்டத்தை வகுப்போம். எனக் கூறினார்.
இதன் போது கல்வி ராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர, ஊவ மாகாண பிரதான செயலாளர் பீ.பி. விஜயரத்ன, ஊவ மாகாணக் கல்விச் செயலாளர் சந்தியா அம்பன்வல, மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.பீ. ரத்நாயக்க உள்ளிட்ட ஊவா மாகாண அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
More useful informations
Very nice