பாடசாலைக்கு ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் புதிய சுற்றிக்கை
அரச சேவையை வழமையான நிலையில் முன்கொண்டு செல்வது தொடர்பாக அரச நிர்வாக அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் மற்றுமொரு சுற்றிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதன் படி, அனைத்து மாகாண, வலய, கோட்ட அலுவலக கல்வி சார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு குறையாத அடிப்படையில் அழைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை கொண்ட புதிய சுற்றுநிருபம் படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளைப் பொறுத்தவரையில், கல்விசாரா ஊழியர்களை பகுதி பகுதியாகவோ, அல்லது பொருத்தமான ஒழுங்கிலோ அழைக்க முடியும் என்றும்,
கல்வி சார் ஊழியர்களை கடமைக்கு அழைக்கத் தேவையில்லை என்றும், அவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுவதாகக் கருதுமாறும், ஏதேனும் கட்டாயத் தேவைகள் இருப்பின் மாத்திரம் மிகக் குறைந்த தொகையினரை அழைப்பதற்கு அதிபர்களுக்கு முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில், வீடுகளில் இருந்து பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்லைன் மற்றும் வேறு முறைகளில் கற்பித்தலில் ஈடுபடுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எழுதியுள்ளார்.