பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொலை மற்றும் தொடர் கல்வி நிலையத்தின் (வெளிவாரிக் கற்கைகள் நிலையத்தின்) பரீட்சார்த்திகள் முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிந்து வருவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சை மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு கை நீள ஆடைகளை அணிந்து வருவதை தவிர்ந்து கொள்ளுமாறும் நிலையத்தின் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வெளியிடப்பட்ட அறிவித்தலில் நீளமான கைகளை உடைய ஆடைகளும் அபாயாக்களும் என்று காணப்பட்ட வசனத்தை தற்போது நீளமான கைகள் கொண்ட ஆடை என்று மாற்றி புதிய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவித்தலின் படியும் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, சல்வார் முதலான ஆடைகள் அணியும் போது கைகள் இல்லாத வகையில் அல்லது கைகளை கட்டையாக வெட்டிய ஆடைகளை மாத்திரமே அணிய முடியும்.
எதிர்வரும் மாதங்களில் கலைமாணி பொது வெளிவாரிக் கற்கைகளுக்கான பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னதாக வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி முகம் மூடும் வகையிலான ஆடைகள் மாத்திரமே தடைசெய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது