இலங்கைப் பொலிஸ்
பொலிஸ் கொஸ்தாபல் பதவி (அரச வேவூப் பிரிவூ)
இலங்கைப் பொலிஸின் அரச வேவூப் பிரிவிற்கு பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
2. கீழ்க்காணும் வகையில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ”பணிப்பாளர் (ஆட்சேர்ப்பு), பயிலுநர் ஆட்சேர்ப்பு அலுவலகம், இல. 375, 01 ஆம் மாடி, ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை, கொழும்பு 06″ என்ற முகவரிக்கு
அனுப்பப்படல் வேண்டும். விண்ணப்பப்படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிப் பெயரினைக் குறிப்பிட்டு பதிவூத் தபாலில் 2019.08.30 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட முகவரியை வந்தடையூமாறு அனுப்பிவைத்தல் வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் இலங்கைப் பொலிஸினால் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.
3. சம்பள அளவூத்திட்டம்.- ரூபா 3,54,480.00 – 7 X 3,600 – 27 X 4,440 – ரூபா 4,99,560.00.
2016.01.01 முதல் 2020.01.01 வரை சம்பளம் பொது நிர்வாக சுற்று நிருபம் இலக்கம் 3-2016 இன் 11 ஆம் அட்டவணையின் பிரகாரம் வழங்கப்படும். மேலும் 2020.01.01 முதல் முழுமையான சம்பள அளவூத்திட்டம்
மேற்குறிப்பிட்டவாறு அமையூம்.
மேலும்