போதைப்பொருளுக்கு எதிராக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் இன்று உறுதி மொழி எடுக்க உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வழிகாட்டலில் இன்று ஆரம்பமாகும் போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளில் கற்றும் சுமார் 150000 பேர் உறுதி மொழி எடுக்க உள்ளதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முல்லைத்தீவு முல்லியாவெலே வித்தியானந்தன் மகா வித்தியாலயத்தில் இவ்விழா நடைபெறஉள்ளது.
இவ்வாரம், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் போதைப் பொருள் பாவனையிலிருந்து விலகி இருப்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுவதோடு போதைப் பொருளுக்கு எதிரான சட்டம் தொடர்பான தெளிவூட்டலும் இடம்பெறவுள்ளது.
24 ஆம் திகதி அரசியல்வாதிகளை தெளிவுபடுத்தவும், 25 ஆம் திகதி ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தவும் 26 ஆம் திகதி சுயாதீனக் குழுக்களுக்கான நிகழ்வுகளும் 27 ஆம் திகதி சமய நிலையங்கள் மற்றும் அறநெறிப்பாடசாலைகளின் ஊடான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருளுக்கு எதிராக உதவுவதற்கு 1984 என்ற கட்டணமற்ற இலக்கத்தை ஜனாதிபதி இந்நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக ஆறிமுகப்படுத்தி வைப்பார்.