மகிந்த ஜயசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல்
ஆசிரியர் அதிபர்கள் தொழில்சங்க நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஜோஸப் ஸ்டாலின் மற்றும் தனக்கு எதிராக பல்வேறு ஆராதமற்ற குற்றச்சாட்டுக்களை சோடித்து முகநூல்வாயிலாக சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், தமது இருப்பிடம் குறித்து விசாரித்து தம்மை அச்சுறுத்த முனைவதாகவும் தெரிவித்துள்ள மகிந்த ஜயசிங்க, தமக்கு கொரியா நாட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பொன்றின் ஊடாக, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தூஷன வார்த்தைகளால் ஏசி, நடுத் தெருவில் கொன்று போடுவதாக தம்மை அச்சுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தலைவர்களைக் கொலை செய்தோ அல்லது சிறையில் அடைத்தோ இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதை நினைவுபடுத்திய மகிந்த ஜயசிங்க, தாம் இறுதி வரை போராடும் உறுதியோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.