மாணவர்களை பகுதி பகுதியாக அழைக்காது, அனைத்து மாணவர்களையும் ஒரே தடவையில் பாடசாலைக்கு அழைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட்19 தொற்று தீவிரமாகக் காணப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டனர். எனினும் தற்போது தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. இப்போது பகுதியளவில் குழுக்களாக மாணவர்களை அழைக்கும் தீர்மானம் நகைப்புக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
பகுதியளவில் மாணவர்களை அழைப்பதற்கு காரணமொன்றுமில்லை. இவ்வாறான தீர்மானங்கள் சுகாதார அதிகாரிகளின் ஊடாகவா பெறப்படுகின்றன.? தற்போது அரசியல் கூட்டங்கள் பரவலாக இடம்பெறுகின்றன. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு அழைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.