நாட்டின் தேசிய பாடசாலைகளில் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-11 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் – 2019
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவூம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்
ஆலோசனைச் செயற்பாட்டுக்காக இலங்கை ஆசிர்யர் சேவையின் 2-11 ஆம் தரத்திற்கு கல்விமானி பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளுதல் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப்படிவங்கள் 2019.04.12 ஆந் திகதியன்றோ அல்லது
அதற்கு முன்னதாகவோ “உதவிச் செயலாளர், ஆசிரியர் தாபனக்கிளை கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை””
என்ற முகவரிக்கு பதிவூத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.
கல்வித் தகைமை .-
5.1. இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் மற்றும் இலக்கம் அமப/ 17/ 0653/ 742/ 009 மற்றும் 2017.05.23 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானங்களுக்கு அமைய 2019.04.12 ஆந் திகதிக்கு பின்வரும்
தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
5.2 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றின் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டம் வழங்கும்
நிறுவனமொன்றின் மூலமாக பெற்றுக்கொள்ளப்பட்ட சமூகவியல் அல்லது உளவியல் பாடங்களில் கல்விமானி பட்டமொன்றை பெற்றிருக்க வேண்டும்.
மற்றும்
5.3 இலங்கை ஆசிரிய சேவைப் பிரமாண குறிப்புகளுக்கு அமைவாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியை ஒரு பாடமாக சித்தி அடைந்திருக்க வேண்டும்.
குறிப்பு 4 – இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்பட்ட க.பொ.த. (சா.த.) பரீட்சைக்குச் சமமாக ஏற்றுக்கொள்ளப்படும் பரீட்சையில் சித்தி எய்தியவர்களுக்கும் விண்ணப்பிக்க முடியூம்.
06. வயதெல்லை .- விண்ணப்பதாரிகள் 2019.04.12 ஆந் திகதியன்று 18 வயதிற்குக் குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
வெற்றிடங்கள்