நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் மாணவர் ஆலோசனை செயற்பாட்டிற்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவை 3 ஆம் வகுப்பின் 1(அ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை
– 2018
மேற்படி ஆட்சேர்ப்பு தொடர்பாக தகைமையூடையோரின் கல்வித் தகைமைகளை பரீட்சிப்பதற்கான நேர்முகப்பரீட்சை கல்வி அமைச்சு 4 ஆம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
அன்றைய தினம் பின்வரும் சான்றிதழ்களின் மூலப்பிரதிகள் மற்றும் நிழற்பிரதிகளுடன் தகைமையூடையோர் தங்கள் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் குறித்த நேரத்தில் சமூகமளிக்கவூம்.
1. தேசிய அடையாள அட்டைஇ செல்லுபடியாகும் கடவூச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம்
2. பிறப்புச் சான்றிதழ் (சுருக்கச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. திருமணத்திற்குப் பிறகு தமது பெயர் மாற்றப்பட்டிருப்பின் திருமண சான்றிதழுடன் சத்திய கடதாசி ஒன்றையூம் சமர்ப்பிக்க
வேண்டும்.
3. கல்வி பொது தராதர (சாதாரண தர) சான்றிதழ்
4. பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் பட்டத்தினை மேற்கொண்ட பாடங்கள் உள்ளடங்கிய சான்றிதழ் கட்டாயமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
5. ஆலோசனை தொடர்பான டிப்ளோமா பாடநெறி சான்றிதழ் அல்லது ஆலோசனை தொடர்பான பட்டப்பின்படிப்பு டிப்ளோமா சான்றிதழ்
6 பட்டத்தினை மேற்கொண்ட மொழிமூலத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
7. அண்மையில் பெறப்பட்ட நற்சான்றிதழ் 01
8. பிரதேச செயலாளரினால் ஒப்பமிடப்பட்ட கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ்
கே.ஜீ. விஜேசிறி ஒப்பம் : பீ.எம். சலாஹுதீன்
சிரேஷ்ட உதவிச் செயலாளர் மேலதிக செயலாளர்