புதிதாக பரவி வரும் கோவிட் தொற்று நிலைமையின் கீழ் அரச நிறுவனங்களின் ஊழியர்கள் அழைக்கப்படும் விதம் தொடர்பாக அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட பொது வழிகாட்டுதல்களை அரசு நிறுவனங்களில் எவ்வாறு செயல்படுத்தப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று (23) ஜனாதிபதியின் செயலாளருடன் இது குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாம் மட்ட அபாயத்தின் அடிப்படையில் மே 31 வரை பொது நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு நேற்று (23) அறிவித்திருந்தது.
இதில், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களின் ஆகக் குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயக்கப்படும் என்றும் முடியுமான அனைத்து வழிமுறைகளிலும் வீட்டிலிருந்து பணியாற்றுவதை மாற்றீடாக பயன்படுத்துமாறு வழிகாட்டப்பட்டுள்ளது.
இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான வழிகாட்டலே அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.