மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாத162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவ்வாறே, முகக் கவசத்தை உரிய வகையில் அணிந்திராத 905 பேருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மேல்மாகாண பொறுப்பு சிரேஸ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணிவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போதே இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.