முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி தொடர்பான விடயப்பரப்பு, கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவையின் அமைச்சுக்களின் கட்டமைப்பும் உள்ளடங்கும் விடயங்களும் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
அவ்வறிவித்தலில், முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி எனும் விடயப்பரப்பு, கல்வி அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயப் பரப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அரசாங்கம் முன்பள்ளிகள் தொடர்பாக பல்வேறு முன்னேற்றகரமான கொள்கைகளை அமுல்படுத்தி வருகின்றது. முன்பள்ளிகளுக்கான கல்விக் கொள்கை வெளியிடப்பட்டதோடு, முன்பள்ளிகளை ஒரு அமைச்சின் கீழ் ஒருமுகப்படுத்துவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, முன்பள்ளிகளும் ஆரம்பக் கல்வியும் கல்வி அமைச்சின் கீழ் உள்ளடக்கப்படும் விடயப்பரப்பாக அமைச்சுக்களின் கட்டமைப்புத் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.