பட்டதாரி பயிலுனர் நியமனத்தின் போது நிராகரிக்கப்பட்டு பின்னர் மேன்முறையீடு செய்தவர்களது விண்ணப்பங்களை பரிசீலித்து நியமனம் வழங்க நடடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதிய அங்கத்துவம் கொண்டிருத்தல், தொழிலில் ஈடுபட்டிருத்தல், களனி பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ் பெற்றிருக்காமை முதலான காரணங்களால் நியமனம் வழங்குவது மறுக்கப்பட்ட பட்டதாரிகள் சமர்ப்பித்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலித்து தகைமையை பரிசீலித்து அவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
முறைப்பாடு செய்யப்பட்ட பின் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தொழழில் வழங்குவது தொடர்பாக எதிர்காலத்தில் கொள்கை அளவிலான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சி நிறம் வேறுபாடு பாராது நியமனம் வழங்கப்படும் எனவும், 2019 ஆம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளை விரைவில் நிரந்தரமாக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
;;