மேல் மாகாணப் பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணப் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக சிரி ஜயவர்தனபுர கோட்டை பிரதேசத்தின் பாடசாலை ஒன்றின் நிலையை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது மேற்கொள்ளப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக இன்று பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடியாதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.