லொறியின் தட்டு உடைந்து 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி


லொறியின் தட்டு உடைந்து 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கலென்பிந்துனுவெவ, தக்ஷிலா மகா வித்தியாலய மாணவர்கள் 13 பேர் லொறியில் இருந்த தட்டு உடைந்து விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் பாடசாலை செல்ல பஸ்சுக்காக காத்திருந்த்போதிலும் பஸ் வராததால் பாடசாலைக்குச் செல்ல சிறிய ரக லொரியில் ஏறி சென்றுள்ளனர்.


பாடசாலைக்குச் செல்லும் வழியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற லொரியின் மேற் தட்டு உடைந்த்தில் லொரியில் இருந்த 37 குழந்தைகளில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் கலென்பிந்துனுவெவ கிராமிய வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!