மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும் வசி்ககும் ஆசிரியர்கள் வேறு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு கடமைக்கு சமூகளித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரையின் படி மேல் மாகாணம் மற்றும் ஏனைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியர்கள் வேறு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு கடமைகளுக்குச் செல்வதை பொருத்தமானதல்ல என்றும் அதன் காரணமாக
இந்த அரச ஊழியர்கள் குறிப்பிட்ட இக்காலப்பிரிவில் வீட்டிலிருந்து சேவை செய்பவராகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, . (இது தொடர்பாக 2020.10.29 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரது கடிதம்)
கடந்த வருடத்தின் மூன்றாம் தவணையில் குறித்த ஆசிரியர்களின் வரவின்மையை தனிப்பட்ட விடுமுறையில் கழிக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.