மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் சேவைத்தொகுதியின்
மோட்டார் வாகனப் பரிசோதகர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான
திறந்த போட்டிப் பரீட்சை- 2018 (2019)
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் சேவைத் தொகுதியின் மோட்டார் வாகனப் பரிசோதகர் தரம் 111 பதவிகளில் காணப்படும் 45 வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தகைமைவாய்ந்த நபர்களைத் தெரிவூ செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில்இ கீழே குறிப்பிட்டுள்ள தகைமைகளைப் புஷுர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப்பரீட்சையானது கொழும்பில் மட்டுமே நடாத்தப்படும்.
01. சேவை நிபந்தனைகள்: அரசாங்க சேவைகளைக் கட்டுப்படுத்தும் பொதுவான நிபந்தனைகளுக்கமையவூம், அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 3/2016க்கு அமையவூம் தயாரிக்கப்பட்டு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்ட MN 03 – 2016 ஆட்சேர்ப்புத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய, தெரிவூ செய்யப்படுகின்ற விண்ணப்பதாரிகள் மோட்டார் வாகனப் பரிசோதகர் பதவியின் தரம் 111 இற்கு நியமிக்கப்படுவார்கள்.
இப்பதவியானது நிரந்தரமானதும் ஓய்வூதிய உரித்துடையதுமாகும்.
02. சம்பளத் தொகுதியூம் அளவூத் திட்டமும்.- சம்பள குறியீட்டு இலக்கம்: MN 03 – 2016 சம்பள அளவூத்திட்டம்: ரூபா 31040 – 10 x 445 – 11 x 660 – 10 x 730 – 10 x 750 – ரூபா 57550
03. பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்ளும் முறை.- எழுத்துமூலமான போட்டிப் பரீட்சை மற்றும் பொதுவான நேர்முகப் பரீட்சையின் முடிவூகளுக்கமைய ஆட்சேர்த்துக் கொள்ளப்படும்.
எழுத்துமூலப் பரீட்சை.- எழுத்துமூலப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளது மொத்தப் புள்ளிகளின் வரிசைக்கிரமத்தைக் கருத்திற் கொண்டுஇ ஆட்சேர்த்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கை யானவர்களை பொதுவான நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தி அதில் தகைமை பெறுபவர்கள்
இப்பதவிக்கு தெரிவூ செய்யப் படுவார்கள்.
பொதுவான நோர்முகப் பரீட்சை.- இதற்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது என்பதுடன் இதன்போது தகைமைகளைப் பரிசோதிப்பது மாத்திரம் இடம்பெறும்.