வாழ்க்கைச் செலவு சுட்டிக்கமைய அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் விசேட திட்டம் விரைவில் வகுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் நிலவும் முரண்பாடுகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளமைக்கு அமைய, உயர்வடைந்து வரும் வாழ்க்கைச் சுட்டியின் பெறுமதிக்கு ஏற்ப அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
களுத்துறை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.தற்போது நாட்டில் 6 இலட்சத்து 40 ஆயிரம் ஓய்வூதியக்காரர்கள் உள்ளனர். இதற்கு மேலதிகமாக வருடாந்தம் 25 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 1,900 கோடி ரூபாவை ஒதுக்குகின்றது. எனினும் இவர்கள் இந்நாட்டுக்காக ஆற்றிய சேவையை கருத்திற்கொண்டு உயர்வடைந்து வரும் வாழ்க்கைச் செலவு சுட்டிக்கமைய சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். (thinakaran)