பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை யில் சித்தி பெற்ற மாணவர்களைப் பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி வழங்குவது தொடர்பிலான சிக்கல் குறித்து கல்வி அமைச்சினால் தயாரித்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
வெட்டுப்புள்ளி அளவைக் குறைப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய தீர்வுகளையும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதுவரை, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந் திருந்தாலும் தரம் 6 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள தாகப் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.