வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் காணப்படும் அரச முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடங்களை
நிரப்புவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சார்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் கொழும்பில்
2019 யஷுலை மாதம் நடாத்தப்படவூள்ள போட்டிப் பரீட்சைக்கு தகுதியூள்ள அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை
மாகாண அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை மற்றும் உள்~ராட்சி அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்
சேவைகளில் இருப்போரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
2. தகைமை.- அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை/ மாகாண அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்
சேவை/ உள்~ராட்சி அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைகளில் உள்ளோர் (இனி முதற்கொண்டு ”சேவை”” என குறிப்பிடப்படும்) பின்வரும் தகைமைகளைப் பஷுர்த்தி செய்தல் வேண்டும்:-
(அ) இச் சேவையின் தரம் i அல்லது தரம் ii இல் உள்ள அலுவலராக இருத்தல் வேண்டும்.
அல்லது
(ஆ) விண்ணப்பத் திகதியன்று இச் சேவையின் தரம் ஐஐஐ இல் குறைந்தது 5 வருட அனுபவத்தைக் கொண்ட அலுவலராக இருத்தல் வேண்டும்.
குறிப்பு: மேற்குறிப்பிட்ட சேவைகளில் அல்லாத பிற முகாமைத்துவ உதவியாளர் சேவைகளிலுள்ள அலுவலர்கள் விண்ணப்பிப்பதற்குத் தகுதியற்றவராவார்.
(இ) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் விண்ணப்பதாரரின் பதவி மற்றும் பணியிடம் என்பனவே பரீட்சை சம்பந்தமான சகல விடயங்களுக்கும் பொருந்தும். விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன்
பின்னர் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் எதுவூம் கவனத்திற் கொள்ளப்படமாட்டா.
(ஈ) விண்ணப்ப முடிவூத் திகதியன்று 57 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். (அதன்படி 1962.06.07 இற்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்குத் தகுதியூடையவராவர்).
(உ) விண்ணப்பம் செய்யூம் திகதிக்கு முற்பட்ட ஐந்து வருட காலப்பகுதியில் சகல வருடாந்த சம்பள அதிகரிப்புகளையூம் உரிய திகதிகளில் சம்பாதித்திருத்தல் வேண்டும்.
(ஊ) எச்சரிக்கை தவிர்ந்த எந்தவிதமான ஒழுக்காற்றுத் தண்டனைகளுக்கும் உட்படுத்தப்படாதவராக இருத்தல் வேண்டும்.
(எ) தற்போது வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகமொன்றில் சேவையாற்றாதவராக இருத்தல் வேண்டும்.
மேலதிக தகவல்கள்
வர்த்தமானி பக்கம் 7