இந்திய அரசின் நிதியுதவியுடன் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகம் மகாத்மா காந்தி புலமைப் பரிசில்கள் 150 ஐ வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்திய – இலங்கை உறவை வலுப்படுத்தும் விதமாக உயர் தரம் கற்கும் கஸ்டப்பிரதேச மாணவர்களுக்கு இவ்வாறு புலமைப் பரிசில்கள் வழங்குவது பயன்மிக்கது எனத் தெரிவித்தார்.
இந்திய உயர் ஸ்தானிராலயம் 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு மாவட்டத்திலிருந்து 4 பேர் எனும் அடிப்படையில் 100 புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. 2012 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் 150 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
மாதம் ஒன்றுக்கு மாணவர் ஒருவருக்கு ரூபா 2500 புலமைப் பரிசிலாக வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.