அடிப்படை சம்பளம் ரூ 10,000
தனியார்துறைக்கும் அதிகரிக்க திட்டம்
2020 ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாய் முதல் 10,277 ரூபா வரை அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் உரையாற்றிய அவர்,
5 கட்டங்களாக சம்பள உயர்வு வழங்க எமது அராசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறுதிக் கட்டத்தின் கீழ் 2020 ஜனவரியில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாவில் இருந்து 10,277 ரூபா வரை அதிகரிக்கப்படும். இது தவிர அரச நிறுவனங்கள், முப்படை, நீதித்துறை என்பவற்றினதும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சம்பள முரண்பாட்டை தீர்க்க ஜனாதிபதியினால் விசேட சம்பள மீளாய்வு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையிலான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வரும் வரை அரச ஊழியர்களுக்கு 2,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (தினரகன்)
குறிப்பு – ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கும் நடைமுறையின் ஐந்தாவது கட்டமாக குறிப்பிட்ட தொகை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படும்.
இதனையே சம்பள அதிகரிப்பாக இங்கு குறிப்பிடுகின்றனர்