2021.07.16 – வர்த்தமானி அறிவித்தல்
பின்வரும் ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
01. நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பொதுப் போட்டிப் பரீட்சைகள் – 2021
பின்வரும் நாடளாவிய சேவைகளின் தரம் iii பதவிகளில் நிலவும் வெற்றிடங்களுக்குத் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச்
செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
– இலங்கை நிர்வாக சேவை
– இலங்கை கணக்காளர் சேவை
– இலங்கை திட்டமிடல் சேவை
– இலங்கை கல்வி நிர்வாக சேவை
– இலங்கை விஞ்ஞான சேவை
விண்ணப்பப முடிவுத் திகதி – 16.08.2021
02. அமைச்சரவை அலுவலகத்தில் சட்ட உத்தியோகத்தர் (நிறைவேற்று சேவை வகுதி – தரம் iii) பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் – 2021
விண்ணப்பப முடிவுத் திகதி – 23.08.2021
03. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள ”மோட்டார் வாகன தொழில்நுட்பவியலாளர்”” பதவிக்கு சிறந்த உடலாரோக்கியமும், நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.08.06
04. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள ”பாதுகாப்பு உத்தியோகத்தர்”” பதவிக்கு சிறந்த உடலாரோக்கியமும், நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.08.06
05. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள ”தோட்டப் பராமரிப்பு உதவியாளர்”” பதவியில் நிலவும் வெற்றிடத்திற்கு சிறந்த உடலாரோக்கியமும், நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.08.06