250,000 ஆசிரியர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டோர் பாடசாலைகளில் கற்பிப்பதில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாடசாலைக் கட்டமைப்பில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ஆசிரியர்கள் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் தினசரி 50,000 ஆசிரியர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறுகிறார்கள், பயிற்சி அல்லது பிற சேவை தேவைகள் காரணமாக சுமார் 16,000 ஆசிரியர்கள் கற்றல் செயல்முறைக்கு வெளியே வேலை செய்கிறார்கள்.
கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்விபரங்களை வெளியிட்டார்.