எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்திற்கொண்டு சுகாதாரத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படும் வகையில் கடமைகளை ஒழுங்குபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக விசேட அட்டை விநியோகிக்கப்பட்ட போதிலும் அத்திட்டம் வெற்றிபெறவில்லை எனவும் அதனை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி இந்த விடுமுறைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதாகவும் அரச தாதியர் சங்த்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையினருக்கு கடந்த மாதம் வெட்டப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் அடுத்த மாதச் சம்பளத்துடன் பெற்றுக் கொள்வதற்கு கலந்துரைாடுமாறு பிரமர் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் கடுமையாகப் பாதித்த காலப்பகுதியில் சுகாதாரத் துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட்டது போல் இம்முறை இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.