இந்நாட்டில் காணப்படுவது கல்வி அமைச்சல்ல மாறாக பரீட்சைகள் அமைச்சே என கல்விக் கொள்கைகள் தொடர்பான நிபுணர் கலாநிதி சுஜாதா கமகே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றோடு பாடசாலை முறைமை பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும், பாடத் திட்ட குறைப்பு நிகழாவிட்டாலும் பரீட்சைகளில் மாத்திரம் எவ்வித குறைகளும் இல்லை என அவர் விசனம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் கீழ் இவ்வளவு பாரியளவிலான ஆளணி இருப்பினும், மூன்று வருடங்களாக கல்வித் துறை வீழ்ச்சியடைந்து சென்ற போதிலும் பாடத்திட்டத்தை இலகுபடுத்துவதற்கு கூட முயற்சிக்காமை கவலைக்குரியது என்றார்.
இப்போது உணவு போக்குவரத்து உட்பட பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ள போதிலும் அவற்றுக்கு முகங் கொடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு போசனைக்காக மதிய உணவு வேளையை வழங்கவே, கற்பித்தலில் அத்தியவசிய தேர்ச்சிகளுக்கு மாத்திரம் சுருக்கிக் கொண்ட புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பினும் அவற்றை யாரும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மேலிருந்து கீழ் வழங்க வேண்டும் என கூறிய கலாநிதி சுஜாதா கமகே, அதிபர்கள், வலய பணிப்பாளர், மாகாணப் பணிப்பளர்களுக்கு தீர்மானிக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.