நாட்டில் தற்போது எரிபொருள் மற்றும் எரிசக்தி சிக்கல் தோன்றியுள்ள பின்னணியில், எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலகியிருக்கும் தீர்மானம் எதுவுமில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை முகநூல் நேரலையில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
நாடு ஏற்கனவே மிக மோசமான நிலையை அடைந்து விட்டது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நாம் விடைத்தாள் திருத்தும் பணிகளிலிருந்து விலகி இருப்பது மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போன்றதாகிவிடும் என அவர் தெரிவித்தார்.
இதே நேரம், ஆசிரியர்களுக்கு கடமைக்குச் செல்வதற்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், கல்வி அமைச்சு அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.